எனக்கும் மனது முழுக்க ஒரே கவலை என்னவென்று தெரியாத ஒரு படபடப்பு..¡ என் கணவர் என்னை பார்த்து ஏன் ஒரே கவலையாக இருக்கிறாய்? என்று கேட்டார் என்னவென்றே தெரியவில்லை மனது ஒரே குழப்பமாக உள்ளது என்றேன், சாப்பிட்டுவிட்டு நன்றாக தூங்கு சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு விருதாச்சலத்தில்உள்ள ஆபிசுக்கு சென்றுவிட்டார்.
பத்து மணிக்கு BSNL landline phone ஒலித்தது அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது, போனை எடுத்தேன் மறுபக்கத்தில் இருந்து அத்தை பாட்டி நம்மை விட்டு 6 மணிக்குபோய்விட்டார்கள் என்று அழுதபடி என் மருமாள்கூறினாள்.
எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. பிறகு ஏன் இவ்வளவு லேட் ஆக கூறுகிறீர்கள் என்றேன் இன்று ஜெயலலிதாவை அரெஸ்ட் பண்ணியதால் கனெக்சன் கிடைக்கவில்லை இப்போதுதான் கிடைத்தது என்றாள்.
எப்போது மற்ற சடங்குகள் நடைபெறும் என்றேன். இங்குஒரே கலாட்டாவாக இருப்பதால் மாலை 5 மணிக்குள் எடுக்கப் போகிறார்கள் என்றாள். சரி என்று கூறி போனை வைத்தேன் என் கணவருக்கு விஷயத்தைக் கூறி போன் செய்தேன். அவரும் உடனே வந்துவிட்டார் சென்னைக்கு கிளம்ப பஸ் ஸ்டாண்ட் வந்தோம் அங்கு பஸ்கள போவது
முடியாத காரியம் அப்படியே போனாலும் வழியில் எங்காவது கலாட்டா வால் நிற்க நேரும் என்று கூறினார்கள் அதுவுமின்றி ஐந்து மணிக்குள் போகாது என்றும் கூறினார்கள் சரி டேக்ஸி யில்போகலாமஎன்றால் ஒரு டாக்ஸி கூட ஸ்டாண்டில் இல்லை. உடனே வீட்டிற்கு வந்து நான் வர முடியாத காரணத்தை கூறிமேற்கொண்டு ஆக வேண்டியது செய்யச் சொன்னேன்
வீட்டிற்கு வந்ததும் நான் ஓவென்று அழுதேன். என் கணவர் நீ உன் கடமையை சரியாக செய்திருக்கிறாய் என்று கூறி சமாதானம் செய்ய முயன்றார், நான் என் அம்மாவை 33 வருடங்கள் வைத்து பராமரித்து வந்தேன். முதல் வருடம் தான் என் அண்ணாவிடம் அனுப்பி வைத்தேன்.
நான்கு நாட்களுக்கு முன்பு தான் என்அண்ணாபோன் செய்து அம்மாவுக்கு உடம்பு சரியில்லை நீ வந்து பார் என்று கூறினார் நான் சென்று பார்த்து ஒரு நாள் முழுவதும் இருந்து விட்டு லீவுஇல்லாததால் திரும்ப வந்தேன் வந்து இரண்டு நாட்களுக்குள் அம்மா இறந்தது மற்றும் கடைசி நேரத்தில் அம்மாவிற்கு செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை செய்ய முடியவில்லை, அப்போது நான்இரண்டு நாட்கள் லீவு போட்டு விட்டு இருக்காமல்
வந்ததுநான் செய்த மகாபெரியதவறு என் மனசாட்சிகூறுகிறது.நான்
தவறவிட்ட அந்ததருணம்என்மனதில்வடுவாக
பதிந்துவிட்டது.
No comments:
Post a Comment