முன்பெல்லாம் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு சமையலில்!!கும்பகோணம் டிகிரி காபி. திருநெல்வேலி அல்வா என்பதுபோல தஞ்சாவூர் கடும் பிட்லை ஒன்று இது மிகவும் பிரசித்தி அதை என் மாமியார் கற்றுக்கொடுத்தார்கள். ஏதாவது விருந்து என்றால் நான் தஞ்சாவூர் கடும் பெட்ல செய்வேன் இது அனைவராலும் புகழப்படும் ,அதை செய்யும் விதத்தை இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்
அதற்கு தேவையான காய்கள்
வாழைக்காய் ஒன்று
கத்தரிக்காய் 4
கேரட் 2
சேனைக்கிழங்கு ஒரு பெரிய துண்டு
உருளைக்கிழங்கு ஒன்று பெரியது
தேங்காய் ஒன்று
தேவையான பொருட்கள்
மிளகாய் 3
துவரம் பருப்பு ஒரு கப்
உளுத்தம் பருப்பு இரண்டு ஸ்பூன்
கடலைப்பருப்பு 2
சீரகம் அரை ஸ்பூன்
மிளகு அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
உப்ப தேவைக்கு ஏற்ப
செய்யும் முறை
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும், காய்களை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் விட்டு நன்றாக கொதித்ததும் காய்களை போடவும். அதில் உப்பு மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும், துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் உளுத்தம் பருப்பு. மிளகாயை வறுக்கவும் அதனுடன் துருவிய தேங்காயையும் வறுக்கவும் அத்துடன் மிளகு சீரகம் இரண்டையும் போட்டு மிக்ஸியில் கரகர ப்பாகஅரைக்கவும். காய்கள் வெந்ததும் அதில் வெந்த துவரம் பருப்பு அரைத்து வைத்த விழுது கொட்டி கொதிக்க வைக்க வேண்டும் நன்றாக கொதித்ததும் எலுமிச்சம் பழ அளவு புளியை கரைத்து விடவும் ஒரு நெல்லிக்காய் அளவு வெல்லம் போடவும்.
இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கடுகு பெருங்காயம் கடலைப்பருப்பு கருவேப்பிலை தாளித்து கொட்டவும் நன்றாக கிளறி விட்டு இறக்கி வைக்கவும் இதுதான் தஞ்சாவூர் கடும் பிட்டத்தை. இதன் வாசனை ஊரையே தூக்கும். சுவையோ நாக்கை விட்டு அகலாது
No comments:
Post a Comment