நேற்று மாலை என் பேததிபாட்டி !பாட்டி! என்று கூப்பிட்டுக் கொண்டு வேகமாக வந்தாள் .ஏன் ?என்ன அவசரம் ?என்று கேட்க… பாட்டி எனக்குபசிக்கிறது ….உடனே டிபன் வேணும் என்றாள்.
சரி சரி காத்தால பண்ணிணஇட்லி இருக்கு சாப்பிடு என்று கூறினேன்,
ஐயோ இட்லியா இந்த கொரானா ஊரடங்கில்தினமும் இட்லி தோசை சாப்பி ட்டு போர் (borr)என்று கூறிக்கொண்டே மாடிக்கு சென்று விட்டாள். என் பிள்ளையும் முணுமுணுத்துக்கொண்டே சென்றுவிட்டான்
நான் உடனே சமையலறைக்குச் சென்று 2 வெங்காயம் 2 தக்காளி ஒரு குடை மிளகாய் எடுத்து பொடிப்பொடியாக நறுக்கினேன். அடுப்பில் வாணலியை போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் கடுகை போட்டு வெடிக்க வைத்தேன். அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கினேன். அடுப்பை சிம்மில் வைத்தேன். ஒரு அங்குல நீளத்திற்கு இஞ்சியை எடுத்து தோல் சீவிஅத்துடன் 5 பல் பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழு தாக்கினேன். அதை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி னேன். தக்காளி குடைமிளகாய் இவற்றையும் அத்துடன் போட்டு வதக்கி னேன். ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் கரம் மசாலா பொடி உப்பூசேர்த்து நன்கு வதக்கி அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்தேன். மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை போட்டு அதில் எண்ணெய்ஊற்றினேன். எண்ணை சூடாவதற்கு ள் காலையில் பண்ணிய இட்லியைஒரு அங்குல சதுரத்திற்கு கட் பண்ணினேன். அதை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தேன்...
கீழே இறக்கி வைத்திருந்த கறிகாய் மசாலாவுடன் பொரித்த இட்லியை போட்டு நன்றாக கலந்து வைத்தேன் அத்துடன் கொஞ்சம் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி தூவினேன். இதோ கைமா இட்லி தயார் என் பேததியை கீழே இறங்கி வா டிபன் ரெடி !என்றேன் .உடனே என் பிள்ளையும் பேத்தியும் மருமகளும்வேகமாக வந்தார்கள் .என்ன டிபன் என்று கேட்டார்கள் .உடனே நான் ஆளுக்கு ஒரு தட்டில் கைமா இட்லி பரிமாறினேன். அதை பார்த்ததும் இருவருடைய முகமும் பிரசன்னம் ஆயிற்று . ஆஹா!!ச.ரவணபவன் கைமா இட்லி என்று கூறினார்கள் .சாப்பிட்டதும் பாராட்டுகள் அப்பப்பா .மறக்க முடியாத ஒன்று!
கொரானாஊரடங்கு சமயத்தில் பொருளை அதாவது சாப்பாட்டு பொருளை வீணாக்காமல் எப்படி உபயோகப்படுத்துவது என்பதை அவர்களுக்கு இதன்மூலம் உணர்த்தினேன்.
No comments:
Post a Comment