ரத்தினமங்கலம் பார்த்து முடித்து விட்டு
சோளிங்கநல்லூர் ப்ரிதியநகரா கோயில்
சென்றோம் .அங்கு மகிஷார மர்தினி
ப்ரிதிங்கரா , நீல சரஸ்வதி , நாககன்னிகை ,ஆகிய
தேவியர்களை தரிசனம் செய்தோம் .நேரமின்மை
காரணமாக நாங்கள் புறப்பட்டு ஷீரடி சாய்பாபா
கோயில் சென்றோம் .அப்பப்ப அந்த அமைதியும் ,
இயற்கை சுழலும் நாம் சென்னை இல்தான் இருகிறோமா
என்ற ஐயத்தை ஏற்படுத்தியது . அங்கு பாபாவின் பா தங்களை
வணங்கி பின் அங்கிருந்து கிளம்பி பூரி ஜகன்னாதர் ஆலயம்
சென்றோம் பகல் இரண்டு மணி என்பதால் கோயில் நடை
சாத்தபட்டு விட்டது .நாங்கள் கோயிலுக்கு எதிரே உள்ள பெரிய
மரத்தடியில் எங்கள் பகல் சாப்பாட்டிற்கு ஜாமக்காலம் விரித்து
அமர்ந்தோம் அருகில் பீச் இருந்ததால் இயற்கை காற்று வீச
எங்கள் சாப்பாட்டு முட்டையை அவிழ்தோம் .முதலில் புளிசாதம் ,
சிப்ஸ் ,பரிமாறப்பட்டது . சாப்பிடும் பொழுது ஒரே சத்தமும் சிரிப்புமாக
அந்த அமைதியான இடம் கலகலப்பாக மாறியது தயிர் சாதம் சாப்பிட்டு
முடிந்ததும் விடுகதைகள் மற்றும் ஜோக்ஸ் என எங்கள் நேரத்தை
ஆனந்தமாக போக்கினோம் . முன்று மணிக்கு பூரி ஜக்கன்நாதர் கோயிலுக்குசென்றோம் ..அங்கு ஒரு வேரில் இருந்து ஆல் ,வேம்பு ,அரசு
ஆகிய முன்று மரமும் பல கிளைகளோடு உள்ளது .இது கற்பக தரு என அழைக்கபடுகிறது .பூரியில் உள்ளது போலவே சுவாமி உருவம் மரத்தால்
செயப்பட்டுள்ளது . அங்கு நடை பெறுவது போலவே பூஜைகளும் நடைபெறுகிறது . கோயிலின் நேர்த்தியும் சுத்தமும் ஒவியங்களும் பார்க்க
பார்க்க பரவசமாக இருந்தது . அங்கிருந்து தாம்பரம் நோக்கி எங்கள்
வண்டி சென்றது
பயணம் தொடரும்
.
No comments:
Post a Comment