நாங்கள் தாம்பரத்திற்க்கு கந்தஆஸ்ரமம் வந்தடைந்தோம் .
முதலில் ப ஞ்சமுக விநாயகர் தரிசித்தோம் .அப்பா எவள்ளவு
பெரியது .புவேநேச்வரி அம்மன் புதுக்கோட்டையில் உள்ளது
போன்றது பார்க்க பார்க்க பரவசமாக மனதை கொள்ளை
கொண்டது .ப்ரித்ரன்கர தேவி ,சகரதழ்வார் . சனீஸ்வர பகவான்
என அணைத்து கடவுல்களும் ஒரே இடத்தில் அதுவும்
பிரமாண்ட உருவத்தில் அமைதியான இடத்தில் பார்க்கும் பொழுது
நாம் இ ரைச்சல் நிறைந்த சென்னையில் இருக்கிறோமா அல்லது
வேறு இடத்தில இருகிரோமா என்ற எண்ணம் ஏற்பட்டது .
இந்த கோயில் சுற்றி நிதானமாக பார்க்க இன்று ஒரு நாள்
போதுமா ? என்று பாட தோன்றியது . நேரத்தின் காரணமாக
மனமின்றி அங்கிருந்து கிளம பினோம் .அனவர்ருக்கும்
சிற்றுண்டி காரசேவ் வழ்ங்க.பட்டது வழியில் அடையார்
ஆனந்தபவன் ஹோட்டல் வந்து சுப்பர் காபி சாப்பிட்டோம் .
எங்கள் ஆனந்தத்தை கண்டு வானத்திற்கும் குஷி வந்து விட்டது .
கொட்டோ கொட்டோ என்று அரைமணி மழை கொட்டியது .அவரவர்களை
அவரவர் வீட்டில் இ றக்கி விட்டு மிகுந்த மனநிறைவோடு வந்து
சேர்ந்தோம் .உள்ளே நுழைந்ததும் போன் ஒலித்தது அடுத்த டூர்
எப்போ என எதிர் முனையில்..................
No comments:
Post a Comment