Tuesday 2 May 2023

சமாராதனை சமையல் கல்யாணம் பூனல் போன்ற விசேஷங்களுக்கு முன்பாக அவர்கள் குலதெய்வத்திற்கு சமாரதனை செய்வது வழக்கம் அதற்கு என்று சமையலில் ஒரு வரைமுறை உண்டு ஓரளவு எழுதி இருக்கிறேன் செய்து பயனடையுங்கள் சமாராதனை சமையல்1 சர்க்கரைப் பொங்கல் 2 தயிர் பச்சடி3 பழ பச்சடி4 வாழைக்காய் கறி5 பூசணிக்காய் ரசவாங்கி6 எள்ளு சாதம்7 பிட்டலை8 மோர் குழம்பு9 ரசம் உளுந்த வடை (ஓட்டை போட்டு)

மசால் தோசை தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி மூன்று பங்கு உளுந்து ஒரு பங்குகடலைப்பருப்பு ஒரு பிடி பயத்தம் பருப்பு ஒரு பிடி வெந்தயம் ஒரு ஸ்பூன் அவல் ஒரு பிடி செய்முறை அனைத்தையும் நன்றாக ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து உப்பு போட்டு நன்றாக கரைத்து வைக்க வேண்டும் மறுநாள் எடுத்து தோசை வார்க்க வேண்டும். இதற்கு உருளைக்கிழங்கு வெங்காயம் போட்ட மசாலா அல்லது வெங்காய சாம்பார் சைட் டிஷ் ஆக வைக்க சூப்பரானஹோட்டல் மசால் தோசை ரெடி

Friday 7 April 2023

தஞ்சாவூர் ஜில்லாவில் சுமங்கலி பிரார்த்தனை அன்று சமையலில் தனி கூட்டு ஒன்று செய்வார்கள் அது எவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறுகிறேன் மற்ற நாட்களில் அதை செய்ய மாட்டார்கள் தேவையான பொருட்களும் செய்யும் முறையும் கடலைப்பருப்பு கொத்தமல்லி விதை மிளகாய் மூன்றையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு சிவக்க வறுக்க வேண்டும் அதை மிக்ஸியில் பொடி செய்து உருண்டையாக பிடிக்க வேண்டும் அந்த உருளை எந்த அளவு உள்ளதோ அந்த அளவிற்கு புளியை எடுத்து கரைத்துக் கொள்ள வேண்டும் அதே அளவு வெல்லம் எடுத்து கொள்ள வேண்டும் மூன்றையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும் அதில் கடுகு கடலைப்பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்து கொட்டி அல்வா பதம் வரும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும் இதன் ருசி மிகவும் நன்றாக இருக்கும் இதை விரும்பாதவர்களை இருக்க மாட்டார்கள் இந்த தனி கூட்டு சுமங்கலி பிரார்த்தனை அன்று மட்டுமே செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கும்பகோணம் கடப்பா கும்பகோணம் என்றாலே கடப்பா நினைவு வருவது சகஜம் இதை விடுவிக்கு சைடிஷ் ஆக கும்பகோணம் இது மிகவும் சத்தான சைட் டிஷ் அதற்கு தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு 100 கிராம் வெங்காயம் உருளைக்கிழங்கு தக்காளி தலா ஒன்று பச்சை மிளகாய் 2 சோம்பு அரை ஸ்பூன் இஞ்சி சிறுதுண்டு பட்டை சிறுதுண்டு பிரிஞ்சி இலை ஒன்றுபூண்டு அஞ்சு பல் கிராம்பு இரண்டு கருவேப்ப கொத்தமல்லி கொஞ்சம் செய்முறை பாசிப்பருப்பு தக்காளி வெங்காயம் உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒன்றாக போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். வேண்டுகிறோம் உருளைக்கிழங்கு நன்றாக மசிக்க வேண்டும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் பிரிஞ்சி இலை இஞ்சி பூண்டு மிளகாய் பட்டை கிராம்பு ஆகியவற்றை தாளித்து அத்துடன் கொத்தமல்லி கருவேப்பிலை போட்டு மசித்து வைத்துள்ள பொருட்களுடன் கொட்ட வேண்டும். அந்தக் கலவையை ஒரு கொதிவரும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும் இப்பொழுது கடப்பா ரெடி இந்த கடப்பா மிகவும் ருசியாகவும் சத்துள்ளதாகவும் அமையும்

Friday 24 July 2020

நேற்று நணபர் ஒருவர் செருப்பு பற்றி
 ஒரு பதிவுவெளியிட்டிருந்தார் அதைப் படித்ததும் எனக்கு 40 வருடத்திற்கு முன் என் நினைவுகள் மனதில் ஒடியதுதமிழ்நாட்டிலிருந்து 1980 ஐந்து ஆசிரியர்களை டெல்லிக்கு தேரதெடுத்து cultural resources training அனுப்பினார்கள் அதில் நானும்ஒருத்தி ஒருமாத ட்ரெய்னிங் அது ,நான் அங்கு கரோல் பாகில் என் தூரத்து உறவினர் வீட்டில் paying guestதங்கினேன். அப்போது ஒரு நாள் அஜ்மல் கான் ரோடு ஒரு கடையில் மிக அழகான செருப்பு ஒன்றைப் பார்த்து வாங்கினேன். அடுத்த நாள் பல கற்பனைகளுடன் அதை போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று நினைத்திருந்தேன் மறுநாள் காலை இந்த செருப்பு கேற்ற புடவை கட்டிக்கொண்டு கிளம்பினேன். அன்று திங்கட்கிழமை பஸ் ஸ்டாண்டில் ஒரே கூட்டம் நான் போகவேண்டிய மண்டி ஹவுஸ் பஸ் வந்தது ஆண் பெண் வித்யாசம் பாராமல் அனைவரும் அடித்துக்கொண்டு ஏறினோம் அப்போது என் செருப்பை ஒருவர் மிதித்துக்கொண்டு ஏற விடாமல் தடுத்தார் நான் சப்பல் சப்பல் என்று கத்தினேன் அவர் அதை காது கொடுத்து கேட்கவில்லை என் செருப்பை மிதித்துக்கொண்டு படியில் ஏறினார் நான் படியில் ஏற என் செருப்பு பஸ்ஸில் இருந்து கீழே விழுந்தது பஸ்ஸும் கிளம்பி விட்டது ஒரு காலில் மட்டும் செருப்பு இருந்தது இறங்கி எடுக்கலாம் என்றாலோபஸ் திரும்பி விட்டது. எனக்கு அழகிய செருப்பு கீழே விழுந்து ஒரு பங்கு அதை மிக ஆசைப்பட்டு வாங்கி வகுப்பில் அனைவரிடம் காட்டவேண்டும் என்று நினைத்தேன் அதிலும் மண் விழுந்தது நினைத்து அழுகை வந்தது ஓரளவு அடக்கிக்கொண்டு என்னுடைய ஸ்டாப் வந்ததும் காலில் இருந்த ஒருசெருப்பை எடுத்து ஆசை தீர பார்த்தேன் அதை என் கர்சீப் பில் எடுத்து சுருட்டிவைத்துக்கொண்டேன். வகுப்பிற்கு சென்று அதை desk அடியில் வைத்தேன், டெல்லி சென்றபோது ஜனவரி மாதம் பயங்கரகுளிர். என் காலில் செருப்பில்லாமல் நடப்பதைப் பார்த்து அனைவரும் ஏன் செருப்பில்லாமல் நடக்கிறாய் என்று கேட்க ஒவ்வொருவருக்கும் என் கதை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது மிகவும் அவமானமாக இருந்தது எப்பொழுது மாலை வரும் வீட்டிற்குச் செல்வோம் என்று நினைத்தேன், மாலை வந்தது அந்தஒற்றைசெருப்பை பத்திரமாக பேப்பரில் சுற்றி எடுத்துக்கொண்டேன், ம்றுநாள் அந்த ஒற்றை செருப்பை எடுத்துக்கொண்டுபோனேன்அடுத்த நாள் பஸ்ஸில் அவ்வளவு கூட்டம் இல்லை உட்காரஇடம் கிடைத்தது. பஸ் புறப்பட்டது உடனே நேற்று எந்த இடத்தில் என் செருப்பு விழுந்ததோ அந்த இடத்தில் என் கையிலிருந்த ஒற்றை செருப்பை வீசி எறிந்தேன்.. பக்கத்திலிருந்த என் சினேகிதி ஏன் செருப்பை தூக்கி போட்டாய்என்று கேட்டாள். நேற்று யாரும் ஒருு செருப்பை எடுத்து இருக்க மாட்டார்கள் இன்று அதன் ஜதையை போட்டால் யாருக்காவது உபயோகமாக இருக்கும் என்று கூறினேன் இதைக்கேட்டு அவள் அதுவும் சரிதான் என்று கூறி சிரித்தாள், இன்றுவரை அதுபோனறசெருப்பு கிடைக்கவில்லை என்பது என் வருத்தத்துக்கு உரியது இதை பதிவு செய்வதால் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்

Monday 1 June 2020

letter

அன்புள்ள பட்டு ( பெயர் மாற்றப்பட்டுள்ளது)
எப்படிடா கண்ணுஇருக்கே? எனக்கு உன்னை பற்றி தான் சதா நினைவு. நீயும் மாப்பிள்ளையும் வீட்டிலிருந்தே வேலை செய்வது அறிந்து சந்தோஷம்!
உனக்கு எப்படி பாட்டி பொழுது போகிறது என்று  நீ கேட்பது 
தெரிகிறது.
எனக்கு என்ன? இரண்டு மாதங்களுக்கு முன் மத்தமர் குரூப்பில் சேர்ந்தது முதல் நேரம் போதவில்லை. நண்பர்கள் எழுதும்பதிவுகளை படிக்கவும் அதற்கு
கமெண்ட்/லைக் எழுதவும் சரியாக இருக்கிறது ஒவ்வொருவருடைய பதிவைப் படிக்கும் போதும் மனதிற்கு உற்சாகம் ஏற்படுகிறது. அதுவும் லாக்டோன் நேரத்தில் மத்திய மர்குரூபஇல்லை என்றால் ரொம்பவே போரடிக்கும். அது சரி உங்களுக்கு வேலை எப்படி இருக்கிறது? உனக்கு டான்ஸ் கிளாஸ் ஆன்லைனில் நடக்கிறதா?
அம்மா அப்பா உன் தங்கை அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள்
உங்களைப் பொறுத்தவரை உங்களுக்கு பல அனுபவங்களை கொரோன சொல்லி கொடுத்திருக்கும்.
கணவன் மனைவியிடையே ஒரு நெருக்கமான அன்னியோன்னியத்தை உண்டாகியிருக்கும் இருவரும் சிரித்துப் பேசி கொண்டு (சில சமயம் சின்ன கோபதாபங்கள்) வேலை செய்வது தனிமையில் பிறருடைய இடையூறு இல்லாமல் இரு வீட்டு குடும்ப விஷயங்கள் உங்களுடைய  சிறு வயது ஞாபகங்களை பேசி மகிழ்வது போன்றவை வாழ்வி ல்ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்ன .நான் சொல்வது சரிதானே.? 
தினமும் எக்சசைஸ் செய் றீங்களா? சைக்கிளிங் வாக்கிங் போனாஇனிஜிம்முக்கு போக வேண்டிய அவசியமில்லை, உடம்பு நல்லா இருக்கும் பணமும் மிச்சம் என்ன சொல்வது சரிதானே

பாட்டி ரொம்ப அட்வைஸ் பண்றேஎன்று நீசொல்வது.  என் காதுல விழுது இருந்தாலும் லெட்டர்ல தான் இதையெல்லாம் கூறமுடியும்
பணமோ சாமான்களோஅவசரத்திறகு
 சேமித்து வைக்கும் பழக்கத்தை இதுசொல்லி கொடுத்திருக்கும், நேரம் அதிகம் இருக்கறதுனால நீங்கள் எல்லோருடனும் பேசி உறவே பலபடுத்துகிறீர்கள் .இதுவரை நினைத்தால் ஹோட்டல் /take away என்று இருந்த நீங்கள் வீட்டிலேயே விதவிதமாக செய்து அசத்துகிறீர்கள் இதெல்லாம் போன்ல சொன்ன போ பாட்டி ரொம்ப ரொம்ப மொக்கை போடுற எனகூறி என்னை பேசவிடாமல் தடுப்பே இது ஒரு நல்ல சந்தர்ப்பம் இதை அமைத்துக் கொடுத்த மதியமர்குரூப்பிற்கு thank s சொல்லணும் சரி சரி எனக்கு நேரம் ஆயிடுச்சு . இதோட லேட்டரை முடிச்சுக்கிறேன். ஏன்னா மத்தியமரில் மற்றவர்கள் எழுதியுள்ளதை பார்க்கரணும். இதுக்கு பதில் எழுது
சொல்ல மறந்துட்டேனே இந்த மாதம் 5.6.2020 வெள்ளிக்கிழமை பெரியவர் ஜெயந்தி அன்று நீ பூஜை செய். மற்றவை
அடுத்த கடிதத்தில்
                               இப்படிக்கு
                                 உன்அன்புள்ள
                                 சியாளா பாட்டி

Wednesday 27 May 2020

ஜன்னல் ஓரம்--------காசி பயணக்கட்டுரை

நம் பாரத புண்ணிய பூமியில் ஆன்மீகத்திற்கும் தவத்திற்கும் புகழ் பெற்றது இப்பூமியில் பல ஆறுகளும் நதிகளும் கடல்களும் இருந்தாலும் கங்கையை புனித நதியாக நாம் போற்றுகிறோம் விசேஷங்களுக்கு மங்கள நீராட்டலுக்கு கங்காஸநானம்
என்றுதான் கூறுவார்

மானிடப் பிறவி எடுத்த நாம் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் காசிக்குச் சென்று புனித நீராடி ஸ்ரீ விஸ்வநாதனை தரிசிக்கவேண்டும் பண்டைக்காலத்தில் காசிக்குச் செல்வது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒன்று ஆனால் இப்பொழுது காலையில் கிளம்பி மாலையில் திரும்ப விமானம் உள்ளது அவ்வளவு எளிதாய் பயணம்!
எனக்கு சிறு வயது முதலே காசிக்கு போக வேண்டும் என்ற அவா ஆனால் பல சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆல் போக முடியவில்லை 8.11…2004 அன்று எங்கள் நண்பர்களுடன் காசிக்குப் போவது என்று முடிவாயிற்று என் கனவு பயணத்திற்கு ஆயத்தம் செய்தேன். என் கணவரோ காசிக்குப் போவது பற்றி அதாவது தம்பட்டம் அடிக்காத குறையாக அனைவரிடமும் கூறி மகிழ்ந்தார் காசிக்குப் போகும் முன்ராமேஸ்வரம் சென்று சேதுக்கரை மண்ணை எடுத்து வந்தோம்


8….11.2004 அன்று மாலை 5…30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வாரணாசி எக்ஸ்பிரஸில் கிளம்பத் தயாரானோம் என் எண்ணம் போல ஜன்னல் ஓரம் இருக்கையில் ரிசர்வ்செய்தேன். 35 மணி நேரம் பயணம் ஜன்னலோர இருக்கை என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இதில் பயணம் செய்பவர்கள் எல்லோரும் ஆன்மீக பக்தர்கள் எனவே ஒரே பஜனையும் ஸ்லோக்முமாக ஒரே குஷிதா!!! பயணகளைப்பே இல்லைவிடியற்காலை அலகாபாத் வந்தடைந்தோம் அங்குள்ள சிவ மடத்தில் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு சில சடங்குகளை செய்தோம் அதாவது ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து வந்த மண்ணில் மூன்றில் ஒரு பகுதியை பிரயாகை யிலும்ஒரு பாகத்தை காசியில் கங்கையிலும் மூன்றாவது பாகத்தை கயையில் பல்குனி ஆற்றிலும் கரைக்க வேண்டும் கங்கை நீரை எடுத்துச்சென்று
 ராமேஸ்வரத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் இதுவே காசி யாத்திரை செல்லும் விதிமுறை!
ஒரு பகுதி மண்ணை எடுத்துக்கொண்டு பிரயாகை சென்றோம் அலகாபாத் என்பதற்கு கடவுளின் நகரம் என்று பெயர் இப்பெயரை அக்பர் சூட்டினார் தீர்த்தங்களின்  ராஜாவாக பிரயாகை வர்ணிக்கப்படுகிறது இங்கு ரிஷிகளும் முனிவர்களும் ரர்யாகங்கள் செய்தாக கூறப்படுகிறது 
திரிவேணி சங்கமம் என்பது கங்கை யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் பச்சை பசேலென்று யமுனையும் நுரை ததும்பும் கங்கையும் உணர முடியாத வகையில் பூமிக்குள் சரஸ்வதியும் ஒன்று சேரும் இடம் திரிவேணி சங்கமம். அந்த இடத்திற்கு படகு சவாரி அதன் சுகமே தனிதான்!!
ஆஸ்திரேலிய பறவைகள் படகை ஓட்டி வருவதை கண்டு ரசித்தோம் அவைகளுக்கு பொரி போட்டு எங்களோடு வருவதை ரசித்தோம் இது எங்களை திக்குமுக்காட வைத்தது இங்கு பண்டாக்கள் நம்மை சூழ்ந்து கொண்டு நம் பொறுமையை சோதிப்பது தவிர்க்க முடியாத ஒன்று இது பொறுமையும் நிதானமும் அவசியம் என்பதை உணர்த்துகிறது இங்கு கணவர் மனைவியின் கூந்தலை பின்னி நுனியில் பூவைத்து அந்த முடியை கத்தரித்து யமுனை நதியில் போடுவார்கள் அந்த முடிமேலே மிதக்காமல்90டிகிரி யில் நதியின் அடிபாகம் நோக்கி செல்லும் பிரமிப்பூட்டும் அதிசயம்!!!! வேறு எங்கும் காணமுடியாது இதற்கு வே ணிதானம் என்று பெயர்.

இங்குதான் கங்கை தன் புனித யாத்திரையை தொடங்குகிறாள் எனவே தாமிர சொம்பில் கங்கையை எடுத்துவந்து நம் பூஜை அறையில் வைத்து 
 பூஜிக்க வேண்டும் என்று ஐதீகம்
மூதாதையர்களுக்கு சி ரார்த்தம்செய்தோம். இங்கு நேருவின் ஆனந்த பவனம் இல்லம் உள்ளது அதைச் சென்று பார்த்து ரசித்தோம் பிறகு காசியை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது எப்போதும் போல் நான் ஜன்னலருகே உட்கார்ந்துகண்டு அனைத்து இயற்கை காட்சிகளையும் ரசித்தேன் வழியில் வரு. அசி என்ற இரு நதிகளையும் கடந்தோம் இந்த இரு நதிகளையும் இனண.த்து வாரணாசி என்று பெயர

நீண்ட நாள் ஆசையான காசியை வந்தடைந்தோம். அன்று மாலை தன திரயோதசி யை முன்னிட்டு அன்னபூரணியைபார்க்க சென்றோம்
அன்று தங்க அன்னபூரணி இடம் ரூபாய் காசு வாங்கினாள் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. எனவே அன்னபூரணியை தரிசித்தோம்
11.11 2004 அன்று தீபாவளி விடியற்காலை மூன்று மணிக்கு கங்கைக்குச் சென்று விளக்கேற்றி நீரில் விட்டோம் உண்மையான கங்கா ஸ்நானம் செய்தோம் புதிய ஆடைகளை அணிந்தோம் அனைவரும் இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாடினோம்.


அன்று தங்க அன்னபூரணி யையும் லட்டு தேரையும் பலவித பட்டணங்களையும் கண்டு ரசித்தோம் தங்க அன்னபூரணி தீபாவளி மட்டுமே காட்சி தருவாள் மற்ற நேரங்களில ரிசர்வ் வங்கியில் வைத்துவிடுவார்கள் அன்னபூரணியை பார்க்க நாங்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தோம். மாலையில் காலபைரவர் கோவிலுக்கு சென்றோம் சாரநாத் புத்தர் ஆலயம் மிகவும் அழகாக இருந்தது இதை சீனர்கள் பராமரித்து வருகிறார்கள் வியாச காசிக்குச் சென்று காசி ராஜாவின் ஆபரணங்களையும் உபயோகித்த பொருட்களையும் பார்த்து வியந்தோம் உலகப் புகழ்பெற்ற பனாரஸ் யூனிவர்சிட்டி சென்று பார்த்தோம் சோழி அம்மனை பார்த்தால்தான் காசி யாத்திரை முழுமையடையும் என்பது நம்பிக்கை அடுத்த இரண்டு நாட்களும் மூதாதையர்களுக்கு காரியங்கள் செய்ய அசிக்காட்அகல்யா காட் அஸ்வமேத காட் பஞ்சகங்கா காட் மணிகர்ணிகாட் சென்று செய்தோம் காசி பழைய காலம் போல குறுகிய தெருக்களும் சைக்கிள் ரிக்ஷாக்கள் காணப்பட்டது சுமங்கலி பூஜை கங்கா பூஜை செய்துவிட்டு கயா செல்ல ஆயத்தமானோம் முகல்சராய் ஸ்டேஷனிலிருந்து ஜோத்பூர் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸில் கயா வந்தடைந்தோம் அங்கு பல்குனி நதியில் நீராடி மூதாதையர்களுக்கு 64 பிண்டங்கள் வைத்து எங்கள் நன்றிக்கடனை செய்தோம் இங்கு தாயாருக்கு செய்யும் நன்றி கடன் மிகவும் போற்றுதற்குரியது அங்கிருந்து அக்ஷய வடம் சென்று 64 பிண்டங்கள் வைத்து நண்பர்கள் மூதாதையர்கள் நாம் வளர்த்த பிராணிகள் அனைவருக்கும் நன்றி கடன் செலுத்தினோம் அங்கிருந்து ஹவுரா வந்து முக்கியமான காளி கோவில் மற்றும் முக்கிய இடங்களை பார்த்து மகிழ்ந்தோம்

17.11.2004 ஹவுராவிலிருந்து சென்னை செல்லும் ரயிலில் ஏறினோம் எப்போதும் போல் ஜன்னல் அருகே உட்கார்ந்து அனைத்து மக்களுக்கும்Bye
சொல்லி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டேன். காசி பயணம் எவ்வித தடங்கலும் இல்லாமல மகிழ்ச்சியாக முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொன்னோம் சென்னை சென்ட்ரல் ரயில்  நிலையத்தில் எங்கள் பேரக்குழந்தைகளும் பிள்ளையும் வந்து வரவேற்றார்கள் எங்கள் வாழ்நாள் முழுக்கவும் இந்த காசி பயணத்தை மறக்க முடியாது என்பது திண்ணம்!!!!!!!!!!!!!!!!